/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரியில் கலக்கும் கழிவு நீருடன் புகார்
/
ஏரியில் கலக்கும் கழிவு நீருடன் புகார்
ADDED : ஆக 09, 2025 12:17 AM

அம்பத்துார், கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கொரட்டூர், பட்டரைவாக்கம், டி.டி.பி., காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வெளியேறும் கழிவு நீர், மழை நீர் வடிகால் வழியாக கொரட்டூர் ஏரியில் கலக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கதினர், கொரட்டூர் ஏரியில் கலக்கும் கழிவு நீரை, அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் ஊற்றும் போராட்டத்தில் நேற்று ஈடுபட முயன்றனர். அம்பத்தூர் போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை மண்டல அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
பின், மண்டலக்குழு தலைவர் மூர்த்தியிடம், புகார் மனுவை வழங்கி பேச்சில் ஈடுபட்டனர். மழை பெய்யாத நிலையில், மழை நீர் வடிகால் வழியாக கொரட்டூர் ஏரிக்குள் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. இதற்கு தீர்வு காண மண்டல கவுன்சிலர்கள் கூட்டத்தில் நடவடிகை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.