/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேசின்பாலம் எஸ்.ஐ., மீது போலீஸ் கமிஷனரகத்தில் புகார்
/
பேசின்பாலம் எஸ்.ஐ., மீது போலீஸ் கமிஷனரகத்தில் புகார்
பேசின்பாலம் எஸ்.ஐ., மீது போலீஸ் கமிஷனரகத்தில் புகார்
பேசின்பாலம் எஸ்.ஐ., மீது போலீஸ் கமிஷனரகத்தில் புகார்
ADDED : பிப் 23, 2024 11:57 PM

சென்னை,சூளை, தட்டாங்குளம், குழந்தை ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் குமார், 36. இவர், உடல் நலம் சரியில்லாமல், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இறுதிச் சடங்கிற்காக, அவரது உறவினர்கள், தேர் வடிவில் பூ அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த பேசின்பாலம் உதவி ஆய்வாளர் வினோத்குமார், 'அனுமதி பெற்றுள்ளீர்களா' எனக் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மறைந்த மகேஷ் குமாரின் உறவினர்களுக்கும் எஸ்.ஐ.,க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, எஸ்.ஐ., ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, பாரத் ஹிந்து முன்னணி சென்னை மாவட்ட அமைப்பாளர் சதீஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீச்சட்டியுடன் வந்து 'எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற போலீசார், விசாரணைக்காக, புளியந்தோப்பு துணை கமிஷனருக்கு அனுப்பி உள்ளனர்.