sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

1,000 சவரன் கேட்டு கொடுமை 'மாஜி' எம்.எல்.ஏ., மீது புகார்

/

1,000 சவரன் கேட்டு கொடுமை 'மாஜி' எம்.எல்.ஏ., மீது புகார்

1,000 சவரன் கேட்டு கொடுமை 'மாஜி' எம்.எல்.ஏ., மீது புகார்

1,000 சவரன் கேட்டு கொடுமை 'மாஜி' எம்.எல்.ஏ., மீது புகார்


ADDED : பிப் 22, 2024 12:34 AM

Google News

ADDED : பிப் 22, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, அம்பத்துார் அடுத்த புதுார், பானு நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 58. அம்பத்துாரில், கட்டுமான தொழில் மற்றும் மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சுருதி, டாக்டர்.

சோழிங்கநல்லுார் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., -- கே.பி.கந்தனின் மகன் சதீஷ்குமாருக்கும், சுருதிக்கும், 2018 ல் திருமணம் நடந்தது.

தற்போது, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கே.பி.கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அம்பத்துார் போலீசில் ஆணையரகத்தில் ஸ்ரீகாந்த் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

இரு வீட்டார் சம்மதத்துடன், கே.பி.கந்தனின் மகனும், சென்னை மாநகராட்சி 182வது வார்டு கவுன்சிலருமான கே.பி.கே.சதிஷ்குமாருடன், 2018ல் என் மகளுக்கு திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது, 'பெண்ணிற்கு 1,000 சவரன் நகைகள், மாப்பிள்ளைக்கு 100 சவரன் நகைகள், இரண்டு விலை உயர்ந்த கார்கள், ரேடோ வாட்ச், வைர பிரேஸ்லெட், வைர மோதிரம் உள்ளிட்டவை, வரதட்சணையாக கொடுக்க வேண்டும்' என, கே.பி.கந்தன் கேட்டார்.

அவர் கேட்டபடி, விலை உயர்ந்த ஆடி மற்றும் பி.எம்.டபிள்யூ., கார்கள், 600 சவரன் நகைகள், 20 கிலோ வெள்ளி உட்பட இதர வீட்டு உபயோக பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்தேன்.

திருமணம் முடிந்து, இரண்டு ஆண்டுகள் வரை சந்தோஷமாக வாழ்ந்தனர். அதன்பின், மருமகனின் தாய் சந்திரா மற்றும் சகோதரி இந்துமதி ஆகியோர், திருமணத்தின் போது கேட்ட 1,000 சவரன் நகைகள் போடவில்லை எனக் கூறி, என் மகள் சுருதியை கொடுமைப்படுத்த துவங்கினர்.

இந்த நிலையில், கடந்த 2019ல் என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஆத்திரமடைந்த கே.பி.கந்தன் குடும்பத்தினர், கடந்த 2021ல், என் மகளை அடித்து கொடுமைப்படுத்தினர்.

இதனால், மன விரக்தியடைந்த என் மகள், திரும்பி என் வீட்டிற்கு வந்துவிட்டாள். இந்த பிரச்னை குறித்து, பலமுறை கே.பி.கந்தனிடம் பேசினேன். இறுதியில், மீதமுள்ள 500 சவரன் நகைகள், அவரது மகன் வியாபாரம் செய்ய 10 கோடி ரூபாய் தர வேண்டும் என, கே.பி.கந்தன் மிரட்டினார்.

எனவே, என் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, வாழவிடாமல் என் வீட்டிற்கு திருப்பி அனுப்பிய மருமகன் கே.பி.கே.சதீஷ்குமார், அவரது தந்தை கே.பி.கந்தன், தாய் சந்திரா, சகோதரி இந்துமதி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

புகாரை பெற்ற ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம், விசாரணைக்காக அம்பத்துார் உதவி கமிஷனருக்கு அனுப்பியுள்ளது.






      Dinamalar
      Follow us