/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவுல்பஜார் ஊராட்சியில் செயலர், வி.ஏ.ஓ., மீது புகார்
/
கவுல்பஜார் ஊராட்சியில் செயலர், வி.ஏ.ஓ., மீது புகார்
கவுல்பஜார் ஊராட்சியில் செயலர், வி.ஏ.ஓ., மீது புகார்
கவுல்பஜார் ஊராட்சியில் செயலர், வி.ஏ.ஓ., மீது புகார்
ADDED : மே 17, 2025 12:15 AM
பம்மல் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியது, கவுல்பஜார் ஊராட்சி. இவ்வூராட்சியில், 6 வார்டுகள் உள்ளன.
இவ்வூராட்சிவாசிகள், வீட்டு வரி, கட்டட அனுமதி, குடிநீர் மற்றும் மின் விளக்கு புகார் உள்ளிட்ட பணிகளுக்காக, நாள்தோறும் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், இவ்வூராட்சி செயலர், சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கவுல்பஜார் ஊராட்சி செயலர், தினசரி காலை 11:00 மணிக்கு மேல் தான் அலுவலகத்திற்கு வருகிறார். சிறு பணிக்கு கூட அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதேபோல், கிராம நிர்வாக அலுவலரும், சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. அவரும் தினசரி காலை 11:00 - 11:30 மணிக்கு தான் வருகிறார்.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பணிக்கு வருவதே இல்லை. எனவே, இவ்விஷயத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு, இரண்டு அதிகாரிகளும் சரியான நேரத்திற்கு பணிக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.