/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி *கோயம்பேடு சந்தை பூங்கா பராமரிப்பின்றி வீண்
/
புகார் பெட்டி *கோயம்பேடு சந்தை பூங்கா பராமரிப்பின்றி வீண்
புகார் பெட்டி *கோயம்பேடு சந்தை பூங்கா பராமரிப்பின்றி வீண்
புகார் பெட்டி *கோயம்பேடு சந்தை பூங்கா பராமரிப்பின்றி வீண்
ADDED : டிச 26, 2024 12:17 AM

கோயம்பேடு சந்தை பூங்கா பராமரிப்பின்றி வீண்
கோயம்பேடில் பழம், காய்கறி சந்தையின் நான்கு, ஐந்தாவது நுழைவாயில் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அதை ஒட்டிய சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. குப்பை கழிவுகள் கொட்டப்பட்டன.
இரு நுழைவாயில் சாலைகளும் குறுகலாகி, வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்காடி நிர்வாகக் குழு அதிகாரிகள், நான்கு மற்றும் ஐந்தாவது நுழைவாயில் சாலை மற்றும் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மீண்டும் ஆக்கிரமிக்காமல் இருக்க, வடிகாலைச் சுற்றி வேலி அமைத்து, அதன் நடுவே பூச்செடி தொட்டிகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், வடிகால் மேல் அமைக்கப்பட்ட பூந்தொட்டியில் உள்ள செடிகள் முறையான பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்படுகின்றன. தவிர, வடிகாலைச் சுற்றி போடப்பட்ட வேலிகள் உடைந்துள்ளன. இவற்றை முறையாக பராமரித்து சீரமைக்க வேண்டும்.
- ரகுராம், கோயம்பேடு