/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி குடியிருப்பு வளாகத்தில் கேமராக்கள் சேதம்
/
புகார் பெட்டி குடியிருப்பு வளாகத்தில் கேமராக்கள் சேதம்
புகார் பெட்டி குடியிருப்பு வளாகத்தில் கேமராக்கள் சேதம்
புகார் பெட்டி குடியிருப்பு வளாகத்தில் கேமராக்கள் சேதம்
ADDED : டிச 05, 2024 12:33 AM

குடியிருப்பு வளாகத்தில் கேமராக்கள் சேதம்
பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய, லைட் ஹவுஸ் குடியிருப்பில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஆண்டு வளாகத்தில், 35 கேமராக்கள் அமைக்கப்பட்டன. இதனால், குற்ற சம்பவங்கள் குறைந்தன. வர்தா புயலில் சில கேமராக்கள் சேதமடைந்தன. அங்குள்ள சிலர், சில கேமராக்களை உடைத்தனர்.
தற்போது, பெரும்பாலான கேமராக்கள் இயங்கவில்லை. திருட்டு, சில்மிஷம் புகார் தொடர்பாக, போலீசார் பார்க்கும்போது கேமராக்கள் இல்லாததால், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என கைவிரிக்கின்றனர். 'வரும்முன் காப்போம்' என்ற அடிப்படையில், கேமராக்களை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கலாவதி, பெரும்பாக்கம்