/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி குப்பை கொட்டுவதை தடுக்க மின்மாற்றி சுற்றி வேலி தேவை
/
புகார் பெட்டி குப்பை கொட்டுவதை தடுக்க மின்மாற்றி சுற்றி வேலி தேவை
புகார் பெட்டி குப்பை கொட்டுவதை தடுக்க மின்மாற்றி சுற்றி வேலி தேவை
புகார் பெட்டி குப்பை கொட்டுவதை தடுக்க மின்மாற்றி சுற்றி வேலி தேவை
ADDED : டிச 10, 2024 12:40 AM
குப்பை கொட்டுவதை தடுக்க மின்மாற்றி சுற்றி வேலி தேவை
அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டு, அமைந்தகரை மஞ்சக்கொல்லை தெருவில், சென்னை மாநகராட்சியின் பெண்கள் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியின் அருகில் உள்ள மின்மாற்றியைச் சுற்றி, பலரும் குப்பை கொட்டி வருகின்றனர்.
தவிர, தடுப்புவேலி அமைக்காமல் இருப்பதால், அவ்வழியாக செல்லும் மாணவர்கள், விளையாட்டாக மின்மாற்றி பகுதிக்கு சென்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மழைநீர் தேங்குவதாலும் விபத்து அபாயம் நிலவுகிறது.
அதனால், பள்ளி அருகில் இருக்கும் மின்மாற்றியைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
- ராகவேந்திரா, அண்ணா நகர்