
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறுகலான நடைபாதையில் சிக்னலால் ஆபத்து
வேளச்சேரி - தரமணி சாலையில், டான்சி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, சாலையின் குறுக்கே நடைபாதை சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் அருகே மேம்பாலம் துவங்குவதால், வேகமாக செல்லும் வாகனங்கள், நடைபாதை சிக்னலை கவனிப்பதில்லை.
இந்த சிக்னல், குறுகலாக இருப்பதால் பாதசாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, பீக் ஹவர்ஸ் நேரத்தில் பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். விபத்துகளும் நடந்துள்ளன.
இதனால், சாலை மைய தடுப்பை அகலப்படுத்தி, விபத்து ஏற்படாத வகையில் நடைபாதை சிக்னல் அமைக்க வேண்டும்.
- பாலகிருஷ்ணன்,
டான்சிநகர், வேளச்சேரி.