/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி அபாய மின் பெட்டி சீரமைக்க கோரிக்கை
/
புகார் பெட்டி அபாய மின் பெட்டி சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 23, 2024 03:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு:காசிமேடு, ப்ளாக் ஸ்டாப் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மின்பெட்டிகள் அபாயகரமான நிலையில், தரைத்தளத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கேபிள்கள் முழுதும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், தரை வழியாக செல்கிறது. மின் பெட்டிகளில் கதவுகள் மாயமாகி உள்ளன. மழைக்காலங்களில், இப்பகுதிகளில் அதிகளவு மழைநீர் தேங்கும் என்பதால், மழைக்கால உயிர்பலியை தடுக்க விரைந்து மின் பெட்டிகளை சரிசெய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.