/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி;ஆபத்தான நிலையில் பூங்கா நுழைவு கதவு
/
புகார் பெட்டி;ஆபத்தான நிலையில் பூங்கா நுழைவு கதவு
ADDED : நவ 28, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆபத்தான நிலையில் பூங்கா நுழைவு கதவு
பெருங்குடி மண்டலம், வார்டு 187, அய்யப்பா நகர், 'அம்மா' உணவகம் அருகே உள்ள சிறுவர் பூங்காவின் நுழைவாயிலில், இரும்புக் கதவு பொருத்தப்பட்ட துாண், சரிந்து விழும் நிலையில் உள்ளது.
இதை அகற்ற கோரி, மாநகராட்சி புகார் எண்: '1913' மற்றும், வார்டு உதவி பொறியாளருக்கும் தகவல் கூறியும், துாண் மற்றும் இரும்புக் கதவு அகற்றப்படவில்லை. காலை, மாலை இரு வேளையும் இப்பூங்காவில் சிறுவர்கள், தங்கள் பெற்றோருடன் வந்து விளையாடி செல்கின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன், நடவடிக்கை தேவை.
- சீனி.சேதுராமன், மடிப்பாக்கம்.