/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகாலட்சுமி நகர் சிக்னலில் போலீசார் அவசியம்
/
மகாலட்சுமி நகர் சிக்னலில் போலீசார் அவசியம்
ADDED : மே 15, 2025 12:39 AM
தாம்பரம் - வேளச்சேரி சாலை, சேலையூர் மகாலட்சுமி நகர் சிக்னல் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
முக்கியமான இந்த சந்திப்பில், வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டத்திற்கு திரும்புவதால், 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், அடிக்கடி சிறு சிறு விபத்துக்களும் நிகழ்கின்றன. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதேபிரச்னை, மேடவாக்கம் கூட்டுசாலை மற்றும் ஈச்சங்காடு சிக்னலிலும் தொடர்கிறது. அதனால், இந்த மூன்று இடங்களிலும், வாகன ஓட்டிகள் வசதிக்காக, போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்.
- வேல் முருகன்,
சேலையூர்