ADDED : ஆக 24, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
சிறு மழைக்கே
குளமாகும் சாலை
கொரட்டூரில், ரயில் நிலையத்திற்கு செல்லும் சீனிவாசபுரம் முதல் குறுக்கு தெருவில், சிறு மழைக்கே குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. அருகில் மழலையர் பள்ளியும் இருப்பதால், பள்ளி குழந்தைகள், பாதசாரிகள் மழைநீர் தேங்கி சகதியான சாலை வழியாக சென்றுவர கடும் சிரமப்படுகின்றனர்.
மேலும், பாசி படிவதால் வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. எனவே, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க, அருகிலுள்ள கால்வாயில் நீர் செல்லும் வகையில் சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– ஜெ.ரவிச்சந்திரன், கொரட்டூர்.
