/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காங்., குறித்து அவதுாறு சவுக்கு சங்கர் மீது புகார்
/
காங்., குறித்து அவதுாறு சவுக்கு சங்கர் மீது புகார்
காங்., குறித்து அவதுாறு சவுக்கு சங்கர் மீது புகார்
காங்., குறித்து அவதுாறு சவுக்கு சங்கர் மீது புகார்
ADDED : மே 16, 2025 12:22 AM
ஆவடி : அம்பத்துார் பகுதி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரோமியோ. இவர், பிரபல யு - டியூபர் சவுக்கு சங்கர், லியோ, மாலதி ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆவடி கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் அளித்தார்.
அதன் விபரம்:
யு - டியூபர் சவுக்கு சங்கர், 'சவுக்கு பாலிடிக்ஸ்' என்ற யு - டியூப் சேனலுக்கு, கடந்த 7ம் தேதி, 'சொத்தை விற்கும் காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு' என்ற தலைப்பில் பேட்டி அளித்துள்ளார்.
அதில், இந்திய தேசிய காங்கிரசை கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன், காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அவதுாறாகவும், சிறுமைப்படுத்தியும், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
மேலும், காங்கிரஸ்காரர்கள் 5 லட்சம் ரூபாய் கொடுத்தால், வாயை பிளப்பார்கள் என, ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரை, மக்கள் மத்தியில் களங்கப்படுத்தியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான இந்த காணொளியை, 1.50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது போன்ற செய்தி பதிவிடுவது, ஒளிபரப்புவதை சவுக்கு சங்கர் வாடிக்கையாக வைத்துள்ளார்.
எனவே, கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் மனதை காயப்படுத்திய சங்கர் உட்பட மூவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநில தலைவர் மாணிக்கவாசகம் என்பவரும், கொளத்துார் மாவட்ட துணை கமிஷனரிடம், சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நேற்று புகார் அளித்துள்ளார்.