தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேளாண் அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

வேளாண் அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

வேளாண் அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா


ADDED : ஆக 31, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, செப். 1–

மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், வேளாண் விற்பனை மற்றும் ஆய்வு இயக்குநரகத்தில், துணை வேளாண்மை விற்பனை ஆலோசகராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற டாக்டர் கோவிந்தரெட்டிக்கு, நேற்று பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் நடந்த விழாவில், உதவி வேளாண்மை விற்பனை ஆலோசகர்கள் ஹரிஷ், சிவகுமார் ஆகியோர், பணி ஓய்வு பெற்ற கோவிந்த ரெட்டிக்கு, நினைவுப் பரிசு வழங்கினர்.

மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் ஆய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

விழாவில், உதவி வேளாண்மை விற்பனை ஆலோசகர் ஹரிஷ் பேசியதாவது:

பணி ஓய்வு பெறும் டாக்டர் கோவிந்த ரெட்டி 26 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியவர். அவருடைய பதவிக்காலத்தில், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தால், அதை திட்டமிட்டபடி முடிப்பார்.

எந்த காரணங்களையும் கூறி, ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்ததில்லை; இது அவருடைய தனி சிறப்பு. அதேபோல, தன் பதவிக் காலத்தில் விடுமுறை எடுக்கவில்லை. ஆந்திர மாநிலம் குண்டூர், டில்லி, பெங்களூரு, சென்னை என, பல்வேறு இடங்களில் சிறப்பாக பணியாற்றியவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழா முடிவில், டாக்டர் கோவிந்தரெட்டி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us