/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலைக்கு செல்லும் வழியில் மாரடைப்பால் நடத்துநர் பலி
/
வேலைக்கு செல்லும் வழியில் மாரடைப்பால் நடத்துநர் பலி
வேலைக்கு செல்லும் வழியில் மாரடைப்பால் நடத்துநர் பலி
வேலைக்கு செல்லும் வழியில் மாரடைப்பால் நடத்துநர் பலி
ADDED : ஆக 04, 2025 04:25 AM

ராஜமங்கலம்,:மாநகர பேருந்து நடத்துநர், பணிக்கு செல்லும் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.
கொளத்துார், கிருஷ்ணா நகர், விவேகானந்தா பிரதான சாலையைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன், 53. அவரது மனைவி உஷாராணி, 48. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
பாண்டுரங்கன், பூந்தமல்லி பணிமனையில் நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று அதிகாலை 4:00 மணியளவில், கொளத்துார், செந்தில் நகர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார்.
அங்கிருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். ஆம்புலன்சில் வந்த செவிலியர் அவரை பரிசோதித்த போது, மாரடைப்பால் உயிரிழந்தது தெரிந்தது.
ராஜமங்கலம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.