ADDED : ஜன 08, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்:சென்னை குடிமைப் பொருள் வழங்கல் துறை போலீசார், பட்டாபிராம் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம், 'டாடா ஏஸ்' வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது.
அரிசி கடத்திய, திருநின்றவூர் பெரியார் நகரைச் சேர்ந்த மாரிமுத்து, 43, வியாசர்பாடி, பி.வி.காலனியை சேர்ந்த பிரகாஷ், 37,
ஆகிய இருவரை கைது செய்தனர். அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.