/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலில் பதுக்கிய செம்மரக்கட்டைகள் பறிமுதல்
/
கோவிலில் பதுக்கிய செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ADDED : மார் 09, 2024 12:24 AM

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, ஆலப்பாக்கம் கிராமத்தில் உள்ளது எல்லையம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் செம்மரம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பென்னலுார்பேட்டை போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்குள்ள மேல் தளத்தில் செம்மரக்கட்டைகளை ஒளித்து வைத்திருந்தது தெரிந்தது.
மேலும், கோவிலை சுற்றியுள்ள முட்புதர்களிலும் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 3 - 5 அடி நீளமுள்ள 105 செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு 2.5 லட்சம் ரூபாய். செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து சீத்தஞ்சேரி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.