மாணவர்கள்–நடத்துநர் இடையே மோதல்: விசாரணை நடத்த உத்தரவு
மாணவர்கள்–நடத்துநர் இடையே மோதல்: விசாரணை நடத்த உத்தரவு
ADDED : செப் 24, 2026 07:43 PM
சென்னை, செப்.25–
பள்ளி மாணவர்கள், நடந்துநர் இடையேயான மோதல் குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ள, பள்ளிக்கல்வித்துறை செயலர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
போரூரில் உள்ள, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஐயப்பந்தாங்கல் முதல் பிராட்வே செல்லும், பஸ் வழித்தட எண் 26ல், நேற்று காலை 9:30 மணிக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது, மாணவர்களுக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், கைக்கலப்பில் முடிந்துள்ளது.
இதுகுறித்து, மாணவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாணவர்களின், பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தது. இதுகுறித்து, உரிய முறையில் விசாரணை செய்து, மேல் நடவடிக்கை மேற்கொள்ள, கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இனி வரும் காலங்களில், இதுபோன்ற சூழலை எப்படி எதிர்கொள்வது, கையாள்வது போன்ற உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிகழ்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
**
