ADDED : செப் 11, 2026 06:11 PM
புளியந்தோப்பு: திண்டிவனத்தை சேர்ந்தவர் முருகன், 54.
இவர், சவுகார்பேட்டையில் மீன் பாடி வண்டி ஓட்டி வருகிறார். வேலை முடித்து, வண்டியை புளியந்தோப்பு சுந்தரபுரம் இரண்டாவது தெருவில் நிறுத்தி உள்ளார். அப்போது, அதே பகுதியில் மீன் பாடி வண்டி ஓட்டும் ஜான்சன், 53 என்பவர், நேற்று முன்தினம் தன் மீன்பாடி வண்டியை கொண்டு வந்து, முருகனின் மீன்பாடி வண்டியை தள்ளிவிட்டு நிறுத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், மது போதையில் இருந்த இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த முருகனை, நேற்று அவரது மனைவி ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விசாரித்த பேசின்பாலம் போலீசார், ஜான்சனை நேற்று கைது செய்தனர்.
