sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ராயபுரம், தீவுத்திடல் நிலையங்களில் குழப்பம்: பஸ்கள் இயக்கம் தெரியாமல் பயணியர் தவிப்பு

/

 ராயபுரம், தீவுத்திடல் நிலையங்களில் குழப்பம்: பஸ்கள் இயக்கம் தெரியாமல் பயணியர் தவிப்பு

 ராயபுரம், தீவுத்திடல் நிலையங்களில் குழப்பம்: பஸ்கள் இயக்கம் தெரியாமல் பயணியர் தவிப்பு

 ராயபுரம், தீவுத்திடல் நிலையங்களில் குழப்பம்: பஸ்கள் இயக்கம் தெரியாமல் பயணியர் தவிப்பு

1


UPDATED : ஜன 25, 2026 06:24 AM

ADDED : ஜன 25, 2026 05:40 AM

Google News

UPDATED : ஜன 25, 2026 06:24 AM ADDED : ஜன 25, 2026 05:40 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், அங்கிருந்து இயக்கப்பட்ட மாநகர பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக நிலையத்தில் இருந்து, நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

போதிய வசதி மற்றும் முறையான அறிவிப்பு இல்லாததால், பயணியர் குழப்பம் அடைந்தனர்.

சென் னை பிராட்வே பேருந்து நிலையம், 650 கோடி செலவில், வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளதால், இங்கிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்ட புதிய தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

இதில், ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கான நுழைவாயில், அங்குள்ள மேம்பால இறக்கத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது.

நெரிசல் மிகுந்த இப்பகுதியில் பேருந்துகள் உள்ளே செல்லும்போது, அதிகளவில் விபத்து ஏற்படும் நிலை இருப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, அதற்கு தீர்வாக என்.ஆர்.டி., மேம்பாலத்தின் கீழே உள்ள அணுகு சாலை வழியாக, பேருந்து நிலையத்திற்கு செல்ல வழிவகுக்கப்பட்டது.

அந்த வகையில், நேற்று முதல் நாள் என்பதால், பாரிமுனையில் இருந்து வரும் பேருந்துகளை, இவ்வழியாக நிலையத்திற்குள் செல்ல, பேருந்து ஓட்டுநர்களுக்கு, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.

பேருந்துகள் வெளியேறும்போது, இப்ராஹிம் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி, பேருந்துகள் இயக்கப்பட்டன.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

மொத்தம் 700க்கும் மேற்பட்ட பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தலா 50 சதவீதமாக பிரித்து, பல்வேறு பகுதிகளுக்கு இயக்கி வருகிறோம். பேருந்துகளை தடையின்றி இயக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

விடுமுறை நாட்கள் என்பதால், பெரிய அளவில் நெரிசல் இல்லை. அலுவலக நாட்களில் தான், உண்மை நிலவரம் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயணியர் குழப்பமும் வாக்குவாதமும்

 ↓பிராட்வேயில் இருந்து நேற்று வழக்கம் போல் வந்த பயணியர் மாநகர பேருந்துகளுக்காக காத்திருந்தனர். பேருந்துகள் இயக்கம் மாற்றம் குறித்து, முழுமையாக தகவல் இல்லை எனக்கூறி, அங்குள்ள போக்குவரத்து அலுவலர் களிடம் பயணியர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்  ↓கிளாம்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக பிராட்வேக்கு செல்லும் சில பேருந்துகளில், ராயபுரம் என்ற பெயர் பலகையை மாற்றவில்லை. பிராட்வே என்றே பலகை இருந்ததால், பயணியர் குழப்பமடைந்தனர்  ↓தீவுத்திடல், ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களில், ஒலி பெருக்கி அறிவிப்பு இல்லாததால், பயணியர் ஒவ்வொருக்கு பேருந்து வழித்தட விபரத்தை கேட்ட பிறகே, பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது  ↓தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையத்தில் தண்ணீர் வசதி இல்லை. சிறிய பகுதி அளவுக்கு மட்டுமே கூரை வசதிகள் இருந்தன. இதுபோல் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us