/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அறிவிப்பு பலகையால் அண்ணாசாலையில் குழப்பம்
/
அறிவிப்பு பலகையால் அண்ணாசாலையில் குழப்பம்
ADDED : பிப் 24, 2024 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே, போக்குவரத்து போலீசார், தவறான குறியீடுடன் கூடிய எச்சரிக்கை பலகை அமைத்துள்ளது, வாகன ஓட்டிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவற்றை மாற்றக் கோரி, சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி கமிஷனர், ஆய்வாளர், எஸ்.ஐ., என அனைத்து தரப்பிலும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எனவே, வாகன ஓட்டிகளை குழப்பம் அடைய செய்யும் வகையில் தவறாக வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகையை மாற்றி அமைக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.