/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் அணிவகுத்து நிறுத்தப்படும் தனியார் பஸ்களால் தொடரும் நெரிசல்
/
தாம்பரத்தில் அணிவகுத்து நிறுத்தப்படும் தனியார் பஸ்களால் தொடரும் நெரிசல்
தாம்பரத்தில் அணிவகுத்து நிறுத்தப்படும் தனியார் பஸ்களால் தொடரும் நெரிசல்
தாம்பரத்தில் அணிவகுத்து நிறுத்தப்படும் தனியார் பஸ்களால் தொடரும் நெரிசல்
ADDED : மார் 16, 2025 12:20 AM
சென்னை, தாம்பரம் ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, வெளியூர் பேருந்துகள் தாம்பரம் செல்ல, கடந்த 4ம் தேதி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளியூரில் இருந்து திண்டிவனம், செங்கல்பட்டு நெடுஞ்சாலை வழியாக வரும் அனைத்து அரசு பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
ஆனால், தாம்பரம் ரயில் நிலையத்தின் நுழைவு பகுதிகளில், தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள் வரிசையாக நிறுத்தி, பயணியரை ஏற்றி செல்கின்றன. இதனால், இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
வெளியூரில் இருந்து வரும் பயணியரில், 30 சதவீதம் பேர் மின்சார ரயில்களில் பயணம் செய்வர். தாம்பரம் ரயில் நிலையம் வரை பேருந்துகள் இயக்கும்போது, பயணியர் மாறி செல்ல வசதியாக இருந்தது.
தற்போது, அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆனால், தாம்பரத்தில் இருந்து தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அதனால், அங்கு நெரிசல் ஏற்படுகிறது.
அரசு பேருந்துகளை தாம்பரம் வரை இயக்க தடை கோரிய போக்குவரத்து போலீசார், தனியார் பேருந்துகளை மட்டும் இங்கு அனுமதிப்பது ஏன்.
உண்மையாகவே இங்கு நெரிசல் குறைய வேண்டுமென்றால், தனியார் பேருந்துகளை இங்கு நிறுத்த அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.