/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் நெரிசல்
/
சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் நெரிசல்
சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் நெரிசல்
சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் நெரிசல்
ADDED : பிப் 16, 2024 12:28 AM

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை காய்கறி மற்றும் மீன் சந்தைக்கு வரும் நபர்கள், ஜீனிஸ் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கோடம்பாக்கம் மண்டலம் சைதாப்பேட்டையில், அண்ணா சாலையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக ஜீனிஸ் சாலை உள்ளது.
இந்த சாலையில் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காய்கறி மற்றும் மீன் சந்தை ஆகியவை அமைந்துள்ளன. இச்சாலையில், 25 அடி அகலம் கொண்ட சைதாப்பேட்டை மார்க்கெட் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது.
சந்தை அமைந்துள்ளதால், தினமும் ஏராளமானோர், இங்கு வந்து செல்கின்றனர்.
கிண்டி தொழிற்பேட்டை, ஆலந்துார் சாலை, மேற்கு சைதாப்பேட்டை பகுதிமக்கள், இந்த சுரங்கப்பாதை வழியாக, அண்ணாசாலை செல்கின்றனர்.
சுரங்கப்பாதை முடியும் இடத்தில் பஜார் சாலை, ஜீனிஸ் சாலை என, நான்கு முனை சந்திப்பு உள்ளது.
ஜீனிஸ் சாலையில் இருந்து மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள சி.பி., பவளவண்ணன் சுரங்கப்பாதையில் வாகனங்கள் திரும்பும் போதும், போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.
அத்துடன் மீன், காய்கறி சந்தை மற்றும் கடைகளுக்கு வரும் நபர்கள், தங்கள் வாகனங்களை ஜீனிஸ் சாலை மற்றும் பஜார் தெருவில் உள்ள சாலையோரம் நிறுத்துவதால், சாலை மேலும் குறுகலாகி நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவும், போக்குரவத்தை சீர் செய்யவும், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.