/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை நடுவே லாரி பழுதால் ராமாபுரத்தில் நெரிசல்
/
சாலை நடுவே லாரி பழுதால் ராமாபுரத்தில் நெரிசல்
ADDED : ஆக 08, 2025 12:39 AM

ராமாபுரம், சாலை நடுவே பழுதாகி நின்ற லாரியால், ராமாபுரத்தில் நெரிசல் ஏற்பட்டது.
வளசரவாக்கம் மண்டலம், நெசப்பாக்கம் - சின்ன போரூர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, ராமாபுரம் பாரதி சாலை உள்ளது.
ஆற்காடு சாலை மற்றும் பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், வாகன ஓட்டிகள், பாரதி சாலையை அதிகம் பயன்படுத்தி சென்று வருகின்றனர். இதனால், 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரங்களில், வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், ஆந்திராவில் இருந்து கட்டுமானத்திற்கான ஏ.சி.சி., கற்களை ஏற்றிய டாடா நிறுவன மினி லாரி, ராமாபுரம் டிரேடர்ஸ் கடைக்கு, நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது.
இரவு 7:00 மணிக்கு, ராமாபுரம் நாயுடு சாலை விநாயகர் கோவில் அருகே உள்ள வளைவில் வந்தபோது, திடீரென பழுதடைந்து நின்றது.
மெக்கானிக் அழைத்து வந்தும் சரிசெய்ய முடிவில்லை. தவிர, வாகனத்தை அங்கிருந்து நகர்த்தக்கூட முடியாததால், பாரதி சாலை, கடம்பன் தெரு, நரசிம்ம பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை 11:30 மணிக்கு, லாரி நிறுவனத்தில் இருந்து மெக்கானிக் வந்து, பழுதை தற்காலிகமாக சரிசெய்தார். அங்கிருந்து புறப்பட்ட லாரி, டிரேடர்ஸ் கடையில் லோடு இறக்கிய பின், அங்கிருந்து புறப்பட்டு சென்றது.