/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு வழிப்பாதையால் திருவொற்றியூரில் நெரிசல்
/
ஒரு வழிப்பாதையால் திருவொற்றியூரில் நெரிசல்
ADDED : டிச 10, 2024 12:38 AM

திருவொற்றியூர், டிச. 10-
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், மாணிக்கம் நகர் பிரதான சாலை - பழைய பேருந்து நிலையத்திற்கும், ஜீவன்லால் நகருக்கும் இடையே, சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாதாள சாக்கடை மூடியை சுற்றி, துளை ஏற்பட்டது.
இதனால் விபத்து ஏற்படலாம் என்பதால், சீரமைப்பு பணிகள் துவங்கி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழுவதுமாக பாதாள சாக்கடை மூடி இருந்த இடத்தில், பள்ளம் தோண்டி உறைகிணறுகள் இறக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால், இடைப்பட்ட, 100 மீட்டர் துாரம், ஒரு வழிப்பாதை அடைக்கப்பட்டு, ஒரே வழிப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. எதிரெதிரே வாகனங்கள் பயணிப்பதால், நெரிசலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
பாதாள சாக்கடை மூடி சீரமைப்பு பணி முடியும் வரை, போக்குவரத்து போலீசார் அப்பகுதியில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.
மேலும், நடைபெற்று வரும் பணிகளையும் விரைவு முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.