/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'யானைகவுனி' பாலத்திற்கு இந்திரா காந்தியின் பெயர் மண்டல கூட்டத்தில் காங்., கவுன்சிலர் கோரிக்கை
/
'யானைகவுனி' பாலத்திற்கு இந்திரா காந்தியின் பெயர் மண்டல கூட்டத்தில் காங்., கவுன்சிலர் கோரிக்கை
'யானைகவுனி' பாலத்திற்கு இந்திரா காந்தியின் பெயர் மண்டல கூட்டத்தில் காங்., கவுன்சிலர் கோரிக்கை
'யானைகவுனி' பாலத்திற்கு இந்திரா காந்தியின் பெயர் மண்டல கூட்டத்தில் காங்., கவுன்சிலர் கோரிக்கை
ADDED : மே 22, 2025 12:34 AM
ராயபுரம் ராயபுரம் மண்டலத்தின் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு தலைமையில் நடந்த கூட்டத்தில், மண்டல அதிகாரி பரிதாபானு, கவுன்சிலர்கள், சுகாதாரத்துறை, பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 17 கோடி ரூபாய் மதிப்பிலான 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
ராஜேஷ் ஜெயின், 57வது வார்டு காங்., கவுன்சிலர்:
மின்ட் தெருவில் தேங்கும் குப்பை முறையாக அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிந்தப்பா தெரு, அண்ணாபிள்ளை தெரு, தாதா முத்தையா தெரு உள்ளிட்ட பகுதிகளில், அபாயகரமாக உள்ள கேபிள்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொத்தவால்சாவடியில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால், சாலையில் நெரிசல், பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக, அதிகளவில் போலீசாரை பணியமர்த்த வேண்டும்.
பாத்திமா முபாசீர், 61வது வார்டு இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலர்:
பருவ மழை துவங்குவதற்கு முன், 61வது வார்டில் உள்ள மழைநீர் வடிகால்களை துார் வார வேண்டும். எத்திராஜ் சாலை, தமிழ் சாலை, எக்மோர் நெடுஞ்சாலை, ஐயாசாமி தெரு, எல்.ஜி.ரோடு உள்ளிட்ட 12 தெருக்களில், பருவ மழை துவங்குவதற்கு முன் சாலைகள் போட வேண்டும்.
ஐயாசாமி தெரு, ஆராமுதன் கார்டன் தெரு, பெருமாள் தெரு உள்ளிட்ட சாலைகளில், மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து துவங்க வேண்டும். மேயர் சுந்தரராஜ் பூங்கா பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது. அதை சீரமைத்து அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ராஜசேகரன், காங்., 63வது வார்டு கவுன்சிலர்:
புதுப்பேட்டை பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்படுகிறது. மின்வாரிய அதிகாரிகளிடம் மின்தடை குறித்து புகார் தெரிவிக்க அழைத்தாலும், அழைப்புகளை எடுப்பதில்லை. நான் கவுன்சிலராக வந்தது முதலே, புதுப்பேட்டையில் தொடர் மின்தடை பிரச்னை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
புதுப்பேட்டை பகுதிகளில் கழிவு நீர் அடைப்பு பிரச்னைகள் அதிகளவில் உள்ளன. எனவே பம்பிங் ஸ்டேஷனில் புதிதாக அதிக குதிரை திறன் கொண்ட மோட்டர்களை நிறுவ வேண்டும்.
நாட்டில் முதல்முறையாக யானைகவுனி காவல் நிலையம் எதிரில் வால்டாக்ஸ் சாலையில் இந்திரா காந்தி சிலை நிறுவப்பட்டது. தற்போது அப்பகுதி, ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு பராமரின்றி மோசமான நிலையில் உள்ளது. எனவே, சிலையை புனரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். யானைகவுனி பாலத்திற்கு இந்திரா காந்தி பாலம் என பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
தற்போது கோடை வெயில் துவங்கி உள்ளதால், தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க ஆவன மேற்கொள்ள குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு, மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் அறிவுறுத்தினர்.
கவுன்சிலர்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.