ADDED : செப் 20, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,ராகுலை அச்சுறுத்தும் வகையில் பா.ஜ.,வினரை பேசியதாக, சென்னையில் காங்., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
சென்னை சத்தியமூர்த்திபவன் முன், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த மறியலில், கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், சூரஜ் ஹெக்டே, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, அழகிரி உள்ளிட்ட அனைத்து கோஷ்டி தலைவர்களும் பங்கேற்றனர்.