/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நெட்' தேர்வை ரத்து செய்ய காங்கிரசார் உண்ணாவிரதம்
/
'நெட்' தேர்வை ரத்து செய்ய காங்கிரசார் உண்ணாவிரதம்
ADDED : நவ 11, 2024 01:51 AM

சென்னை:பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., கடந்த மார்ச் 27ம் தேதி, முனைவர் பட்டப்படிப்பான பிஹெச்.டி., படிக்க, நெட் தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இதை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு சார்பில், சென்னையில் நேற்று, உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
போராட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழக காங்., ஆராய்ச்சி பிரிவு தலைவருமான மாணிக்கவாசகம் கூறியதாவது:
ஏற்கனவே, பல்வேறு தகுதித் தேர்வுகள் இருக்கும் நிலையில், மத்திய அரசு நடத்தும் இந்த தேர்வால், கிராமப்புற மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பகுதி நேர மாணவர்கள் ஆகியோர், பிஹெச்.டி., படிக்கும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் அரசு மற்றும் தனியார் கல்லுாரி ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள இரு மத்திய பல்கலைகள் உட்பட நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைகளில் சேர, 'க்யூட்' எனும் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த, தமிழக மாணவர்களுக்கு, மத்திய பல்கலைகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.