sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாடு காங்கிரஸ் கண்டன பேரணி

/

 'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாடு காங்கிரஸ் கண்டன பேரணி

 'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாடு காங்கிரஸ் கண்டன பேரணி

 'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாடு காங்கிரஸ் கண்டன பேரணி

1


ADDED : மார் 14, 2026 05:16 AM

Google News

ADDED : மார் 14, 2026 05:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'காஸ்' சிலிண்டர் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று, கண்டன பேரணி நடந்தது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தலையில் காஸ் சிலிண்டர் சுமந்து, சிந்தாதரிப்பேட்டை எல்.ஜி.ரவுண்டானாவிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.

ஆல்பர்ட் திரையரங்கம் அருகே, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அணியினர், சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து, கும்மியடித்தபடி பேரணியில் சென்றனர்.

செல்வப்பெருந்தகை பேசுகையில், ''தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை என்றால், பா.ஜ., அலுவலகத்தையும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கவில்லை என்றால், அ.தி.மு.க., அலுவலகத்தையும் முற்றுகையிடுவோம்,' என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்தும், , துாத்துக்குடி சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் வலியுறுத்தி, அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில், தலைமை செயலகம் முன், நேற்று போராட்டம் நடந்தது.

அக்கட்சியின் தலைவி ராஜேஸ்வரி பிரியா தலைமையில், 150க்கும் மேற்பட்டோர் இரண்டு பேருந்துகளில், தலைமை செயலகத்திற்கு வந்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை, போலீசார் கைது செய்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us