ADDED : ஜன 20, 2024 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுவண்ணாரப்பேட்டை, 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவங்கினார்.
'மிக்ஜாம்' புயல் பாதிப்புகளை பார்க்க வராத நிலையில், விளையாட்டு போட்டியை துவங்க வந்ததால், காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதனால் நேற்று, புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள காங்., வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம், வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட காங்., தலைவர் டில்லிபாபு ஆகியோரை, போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர்.