/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளப் 'டி-20' கிரிக்கெட் போட்டி கான்குரர் எம்பையர் அணி வெற்றி
/
கிளப் 'டி-20' கிரிக்கெட் போட்டி கான்குரர் எம்பையர் அணி வெற்றி
கிளப் 'டி-20' கிரிக்கெட் போட்டி கான்குரர் எம்பையர் அணி வெற்றி
கிளப் 'டி-20' கிரிக்கெட் போட்டி கான்குரர் எம்பையர் அணி வெற்றி
ADDED : நவ 11, 2025 12:31 AM

சென்னை: கிளப் கிரிக்கெட் போட்டியில், 'கான்குரர் எம்பையர்' கிளப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை ஆர்.ஏ.சி., கல்லுாரி சார்பில், கிரிக்கெட் கிளப் அணிகளுக்கு இடையே, 'டி--20' கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இதற்கு முன்னோடியாக, சென்னை ஆர்.ஏ.சி., கல்லுாரி மைதானத்தில் நட்பு போட்டிகள் நடந்தன. இதில் கான்குரர் எம்பையர் கிளப் அணி, ராயல் கிரிக்கெட் கிளப் அணியுடன் மோதியது.
டாஸ் வென்ற ராயல் சி.சி., அணி முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரரான தேவா 53 ரன்கள் அடித்து அணிக்கு உதவினார். தொடர்ந்து களம் இறங்கி, சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அந்த அணி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதையடுத்து, 112 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கான்குரர் எம்பையர் கிளப் அணிக்கு துவக்க ஆட்டக்காரரான மணிகண்டன் நல்ல துவக்கத்தை வழங்கினார். விக்கெட் இழக்காமல் பொறுமையாக விளையாடிய லெனின் ஜெபகுமார் 50 ரன்களுடனும், பால ஆதித்யா 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முடிவில் கான்குரர் எம்பையர் கிளப் அணி, 14 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 112 ரன்கள் அடித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

