/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்டவாளத்தில் கல் ரயிலை கவிழ்க்க சதியா?
/
தண்டவாளத்தில் கல் ரயிலை கவிழ்க்க சதியா?
ADDED : நவ 06, 2024 12:57 AM

சென்னை,
சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.
இந்த ரயில், அம்பத்துார் ரயில் நிலையத்தை கடந்தபோது, அம்பத்துார் -- திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளத்தில் பெரிய கட்டட கழிவு, அதாவது சிமென்ட் கலந்த செங்கல் வைக்கப்பட்டிருந்ததை ரயில் ஓட்டுநர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ எடை கொண்ட சிமென்ட் கலவை கலந்த செங்கலை அகற்றினர்.
தொடர்ந்து, அங்கிருந்து 100 மீட்டர் வரை நடந்து சென்று போலீசார் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று காலையும் சம்பவ இடத்துக்கு சென்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், ரயில் நிலையங்களில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 'ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா?' என்ற கோணத்தில், ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.