ADDED : அக் 13, 2025 04:58 AM

கோடம்பாக்கம்: தி.நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க., நிர்வாகிகள், பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம், கோடம்பாக்கம் மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் நேற்று நடந்தது.
தி.நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், பகுதி செயலருமான கருணாநிதி தலைமை வகித்தார். கவுன்சிலரும், பகுதி செயலருமான ஏழுமலை, தலைமை செயற்குழு உறுப்பினர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகளுக்கு பட்டாசு, மிக்ஸி, இனிப்பு ஆகியவை அடங்கிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில், எம்.எல்.ஏ., கருணாநிதி பேசியதாவது:
உங்கள் ஒத்துழைப்பால், கட்சி தலைமை அளித்த அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. பீஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில், 60 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டனர். அதேபோல் தமிழகத்திலும் செய்ய முயற்சிப்பர்.
தி.நகர் தொகுதியில் நம் கட்சி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க, ஒரு குழு வேலை செய்துக் கொண்டிருக்கிறது. இதனால், நாம் விழிப்போடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கட்சியின் வட்ட செயலர்கள் முரளி, வெல்டிங் ராஜா, கமல், தட்சன் ஹரிஹரன், மாரி, துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.