/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் குறுக்கே கட்டுமானம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
வடிகால் குறுக்கே கட்டுமானம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
வடிகால் குறுக்கே கட்டுமானம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
வடிகால் குறுக்கே கட்டுமானம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : பிப் 15, 2024 12:14 AM
பெரும்பாக்கம், பெரும்பாக்கம் அடுத்த சதுப்பு நிலத்தை ஒட்டி, வடிகால் குறுக்கே தனியார் கட்டுமான நிறுவனம் பணிகளை துவங்கி உள்ளது. இதனால், மழைநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேடவாக்கம் -அடுத்த பெரும்பாக்கம் பகுதி, 2015ம் ஆண்டு மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியிலிருந்து சதுப்பு நிலம் வரை, மழைநீர் வடிகால் அமைக்க தொடர் கோரிக்கைகள் எழுந்தன.
அதன்படி, பெரும்பாக்கத்திலிருந்து, தலா 5 அடி அகலம் உள்ள மூன்று வடிகால்கள், சதுப்பு நிலம் வரை கட்டப்பட்டன. இதன் பயனாக, சில ஆண்டுகளாக பெரும்பாக்கம் கைலாஷ் நகர், பெருமாள் நகர் உள்ளிட்ட 20 தெருக்களில் மழை வெள்ள பாதிப்பு இல்லை.
சமீபத்தில், இந்த மூன்று வடிகால்களும் சதுப்பு நிலத்தை சென்றடையும் இடத்தின் குறுக்கே, 17 ஏக்கர் பரப்பில், 1200 வீடுகள் உள்ள குடியிருப்பை உருவாக்க, பிரபல தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன.
அப்பகுதியினர் கூறியதாவது:
சதுப்பு நிலத்தை ஒட்டி, 17 ஏக்கர் பரப்பில் தனியார் நிறுவனம், கட்டுமான பணிகளை துவக்கி உள்ளதால், பெரும்பாக்கம் பகுதியிலிருந்து வரக்கூடிய மூன்று வடிகாலும், சதுப்பு நிலத்தில் மழைநீரை வெளியேற்றும் திறனை இழந்துள்ளன.
கடந்த டிசம்பரில், மிக்ஜாம் புயல் கனமழையால், பெரும்பாக்கம் ஏரி உபரி நீர் மற்றும் தெருக்களில் தேங்கிய மழைநீர், இந்த மூன்று வடிகால் வழியாக சதுப்பு நிலத்தை சென்றடைந்திருக்கும்.
ஆனால், வடிகால் குறுக்கே, தனியார் நிறுவனம் அடைப்பு ஏற்படுத்தியதாலேயே, பெரும்பாக்கம் பகுதியில், அதிக வெள்ளம் சூழ்ந்தது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவ்விடத்தை பார்வையிட்டு, மூன்று வடிகால் பாதைக்கும் தடை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

