/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.50.45 லட்சத்தை வட்டியுடன் திருப்பித்தர கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவு
/
ரூ.50.45 லட்சத்தை வட்டியுடன் திருப்பித்தர கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவு
ரூ.50.45 லட்சத்தை வட்டியுடன் திருப்பித்தர கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவு
ரூ.50.45 லட்சத்தை வட்டியுடன் திருப்பித்தர கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவு
ADDED : ஆக 22, 2025 12:30 AM
சென்னை, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் வீடு வழங்காத கட்டுமான நிறுவனம் அதற்காக வசூலித்த, 50.45 லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், தையூரில் அக் ஷயா நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் வீடு வாங்க, அஜய் பாலாஜி என்பவர், 5.52 லட்ச ரூபாய் கொடுத்து, 2022 மார்ச் மாதம் முன்பதிவு செய்தார். இதையும் சேர்த்து பல்வேறு தவணைகளில், அஜய் பாலாஜி, 50.45 லட்ச ரூபாயை கட்டுமான நிறுவனத்துக்கு செலுத்தினார். ஒப்பந்தத்தில், 2022 ஜூனில் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதி அளித்து இருந்தது.
ஆனால், கட்டுமான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை. இதனால், தான் செலுத்திய பணத்தை அஜய் பாலாஜி திரும்ப கேட்டுள்ளார். இதற்கு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொள்ளாத நிலையில், அஜய் பாலாஜி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணையத்தின் தலைவர் ஷிவ்தாஸ் மீனா, உறுப்பினர்கள், எல்.சுப்ரமணியன், எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
புகாரில் குறிப்பிடப்பட்ட கட்டுமான நிறுவனம் குறித்த காலத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை என்பது உறுதியாகிறது. எனவே, மனுதாரர் செலுத்திய 50.45 லட்ச ரூபாயை வட்டியுடன், 30 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும். மேலும், இத்திட்டத்தில் வீடு வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய மனுதாரர் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

