/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.160 கோடியில் ஏழைகளுக்கு 776 வீடுகள் வாரிய குடியிருப்பு கட்டும் பணி துவக்கம்

ADDED : ஜன 20, 2025 02:35 AM

தங்கசாலை,:சென்னை தங்கசாலையில், ஆங்கிலேயர் கால கட்டடத்தில், பொதுப்பணித்துறை பணிமனை இருந்தது. இங்கு, அணைகளுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கும் தொழில்கூடம் செயல்பட்டு வந்தது. 150 ஆண்டுகளை கடந்து, மிகவும் பாழடைந்து அபாயரமான காட்சியளித்த கட்டடத்தை இடித்து விட்டு, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் கட்ட வேண்டுமென, அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 160 கோடி ரூபாயில், 776 புதிய குடியிருப்புகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, பழமை வாய்ந்த கட்டடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது. புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள் தலா, 400 சதுர அடியில், 776 வீடுகள் கட்டப்பட உள்ளன.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெருநகர வளர்ச்சி குழுமம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடம், தற்போது நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கி உள்ளன.
இதில், தலா ஒரு குடியிருப்பு, 400 சதுரடியில் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை மற்றும் கழிவறை ஆகிய வசதியுடன் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகளை, 18 மாதத்திற்குள் முடிவடையும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.