/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுற்றுச்சுவர் கட்டும் பணி மயிலாப்பூரில் துவக்கம்
/
சுற்றுச்சுவர் கட்டும் பணி மயிலாப்பூரில் துவக்கம்
ADDED : ஜூலை 02, 2025 12:41 AM

சென்னை, காவலர் குடியிருப்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, நம் நாளிதழ் செய்தி எதிரொலியால் நடந்து வருகிறது.
மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில், 88 காவலர்கள், 32 எஸ்.ஐ.,க்கள், 16 ஆய்வாளர் என, மொத்தம், 136 பேர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
நான்கு மாதங்களுக்கு முன், காவலர் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதியில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை மாநகராட்சியினர் மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள மரத்தை வெட்டியபோது மரம் முறிந்து விழுந்ததில், காவலர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதன்பின் மாநகராட்சியினர், அதை சீரமைத்து தரவில்லை.
இதனால் இரவு நேரத்தில், காவலர் குடியிருப்பில் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருட்டு நடப்பதாக, நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மாநகராட்சி ஊழியர்கள் காவலர் குடியிருப்பில் சுற்றுச்சுவர் கட்டி வருகின்றனர்.