/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய கைலாஷ் 'எல்' வடிவ மேம்பாலம் ஓடுதளம் அமைக்கும் பணி இறுதிக்கட்டம்
/
மத்திய கைலாஷ் 'எல்' வடிவ மேம்பாலம் ஓடுதளம் அமைக்கும் பணி இறுதிக்கட்டம்
மத்திய கைலாஷ் 'எல்' வடிவ மேம்பாலம் ஓடுதளம் அமைக்கும் பணி இறுதிக்கட்டம்
மத்திய கைலாஷ் 'எல்' வடிவ மேம்பாலம் ஓடுதளம் அமைக்கும் பணி இறுதிக்கட்டம்
ADDED : அக் 08, 2025 03:19 AM

சென்னை,'மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டு வரும், 'எல்' வடிவ மேம்பால பணிகள் முடிந்து, டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.
அடையாறு, சர்தார்பட்டேல் சாலையில், மத்திய கைலாஷ் சந்திப்பில், 'எல்' வடிவ மேம்பாலம் கட்ட, 85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 25 கோடி ரூபாயில், 300 மீட்டர் நீளம், 20 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
கட்டுமான பணி, 60 கோடி ரூபாயில், 2023ம் ஆண்டு துவங்கியது. மொத்தம், 2,130 அடி நீளம், 26 அடி அகல மேம்பாலத்திற்கு, 18 பில்லர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதன் மைய பகுதி, 26 அடி உயரம் கொண்டது. பில்லர்கள் மேல், 'டெக் சிலாப்' என்ற ஓடுதளம், 19 எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். இதில், 16 ஓடுதள பணிகள் முடிந்துள்ளன. இரண்டில் பணிகள் நடக்கின்றன; ஒரு ஓடுதள பணி துவக்க வேண்டியுள்ளது.
மேம்பாலத்தின் கீழ் பகுதி, சர்தார்பட்டேல் சாலை, 75 அடி அகலமாக இருந்து தற்போது, 110 அடி அகலமாக மாற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியானதால், அதற்கு ஏற்ப பணி நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்து, டிசம்பர் மாதம் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தால், சர்தார்பட்டேல் சாலையில், போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என, அதிகாரிகள் கூறினர்.