ADDED : மார் 18, 2026 05:54 AM

திருவொற்றியூர்: மணலி, மணலிபுதுநகர் - மாதவரம் மற்றும் திருவொற்றியூரை இணைக்கும் வகையில், சி.பி.சி.எல்., சந்திப்பு உள்ளது. தினசரி இந்த சந்திப்பை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இருப்பினும், சி.பி.சி.எல்., சந்திப்பு குறுகலாக இருப்பதால், பேருந்து, பெரிய வாகனம் திரும்புவதில் சிக்கல் இருந்தது. அதன்படி, 3.50 கோடி ரூபாய் செலவில், மூன்று முனை சந்திப்பாக பிரமாண்ட ரவுண்டானா அமைக்கும் பணி, சென்னை நகர சாலைகள் துறையால், மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
இப்பணிக்காக, சாலைகளை அளவிடும் வகையில், ஆங்காங்கே இரும்பு கம்பிகள் நடப்பட்டுள்ளன. இதில் சில கம்பிகளுக்கு, பிளாஸ்டிக் கோணிகள் போட்டு வைத்துள்ளனர். பெரும்பாலான கம்பிகள் எவ்வித பாதுகாப்புமின்றி அப்படியே விட்டுள்ளனர்.
இதனால், அவ்வழியே செல்லும் இருசக்கர, வாகன ஓட்டிகள் ஜல்லிக்கற்களால் நிலைதடுமாறி, கம்பிகளில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், காயம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
