/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவம் ஆற்றில் தீக்குளித்த கட்டட தொழிலாளி பலி
/
கூவம் ஆற்றில் தீக்குளித்த கட்டட தொழிலாளி பலி
ADDED : ஜூலை 18, 2025 12:14 AM
அமைந்தகரை, குடும்ப பிரச்னையால், கூவம் ஆற்றின் ஓரம், மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரும்பாக்கம், என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்தவர் அயர்ரத்தன், 55. கட்டடத் தொழிலாளியான இவர், மது போதையில் வீட்டில் இருப்போரிடம் தகராறு செய்துவந்துள்ளார்.  கடந்த 12ம் தேதி, மகன் மற்றும் மனைவி இருவரும், உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள கூவம் ஆற்று கரைக்கு மண்ணெண்ணெயுடன் சென்றுள்ளார்.
மது போதையில் இருந்த அயர்ரத்தன், மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி, தீவைத்துக் கொண்டார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, 70 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்தது தெரிந்தது. அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

