/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டட தொழிலாளர்களின் மொபைல் போன் திருட்டு
/
கட்டட தொழிலாளர்களின் மொபைல் போன் திருட்டு
ADDED : ஜூலை 31, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் இன்பரசு, 30. இவர், புரசைவாக்கம் அருகே டோபிகானா பகுதியில் நடக்கும் கட்டட பணியில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடன் திருப்பத்துாரைச் சேர்ந்த சந்திரசேகர், வடமாநிலத்தைச் சேர்ந்த சம்சுதீன் மண்டால் மற்றும் ரபியுல் உள்ளிட்டோர், அங்கேயே தங்கி பணிபுரிகின்றனர். நேற்று காலை துாங்கி எழுந்து பார்த்தபோது பணியாட்கள் மூவரின் 50,000 ரூபாய் மதிப்பிலான மொபைல்போன்களும், துணிகளும் காணாமல் போயிருந்தன. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

