ADDED : மார் 28, 2026 05:11 AM
வண்ணாரப்பேட்டை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப் பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டம், கோட்டா போளுரைச் சேர்ந்தவர் முனீந்திரா, 47; கட்டடத் தொழிலாளி. கடந்த 25ம் தேதி கட்டுமான ப ணியில் ஈடுபட்டிருந்த போது, கால் இடறி மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த சூலுார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; மேல் சிகிச்சைக்காக, வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முனீந்திரா, நேற்று அதிகாலை 1:00 மணியளவில் மூளைசாவு அடைந்தார். தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
அதன்படி, அவரது சிறுநீ ரகங்கள், நுரையீரல்கள், தோல், கண் ஆகிய உறுப்புகள், அரசு விதிமுறைகளின் படி பதிவு செய்து காத்திருந்த நோயாளிகளுக்கு, தானமாக வழங்கப்படும் என, மருத்துவமனையின் டீன் அரவிந்த் தெரிவித்தார்.
