தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி தீக்கிரை

தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி தீக்கிரை

தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி தீக்கிரை


ADDED : மார் 14, 2024 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திர மாநிலம் குண்டூர் நோக்கி, நேற்று அதிகாலை காலி கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 28, என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார்.

சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த வேர்க்காடு அருகே சென்ற போது, லாரியின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை கிளம்பியது.

லாரியை சாலையோரமாக நிறுத்தி, ஓட்டுனர் கீழே இறங்கி பார்ப்பதற்குள் லாரி தீப்பற்றியது.

மளமளவென தீ பரவியதால், லாரி மற்றும் கன்டெய்னர் பகுதி முழுதும் தீப்பிடித்து எரிந்தது. பின்னால் ஆந்திரா நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். தொடர்ந்து, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

அதிகாலையில் ஓடிக்கொண்டிருந்த கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us