/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டெய்னர் லாரியின் டயர் வெடித்து விபத்து
/
கன்டெய்னர் லாரியின் டயர் வெடித்து விபத்து
ADDED : டிச 11, 2024 12:30 AM

எண்ணுார், சென்னை துறைமுகத்தில் இருந்து பருப்பு மூட்டைகளை ஏற்றி, கன்டெய்னர் லாரி சென்றது. லாரி, எண்ணுார் கடற்கரை சாலை வழியாக சென்றபோது, முன்பக்க டயர் வெடித்து லாரி கட்டுப்பாட்டை இழந்தது.
சுதாரித்த ஓட்டுனர் சுப்ரமணி, சாலை தடுப்பு சுவரில் லாரியை மோத செய்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் தப்பினார்.
இந்த விபத்தில், லாரியின் முன்பக்கம் இருந்த டீசல் டேங்க்கில் ஓட்டை விழுந்து, டீசல் சாலையில் கொட்டியது. திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார், மணலை கொட்டி சரிசெய்தனர். இதையடுத்து, போக்குவரத்து சீர் செய்து லாரியை மீட்டனர்.
அதிக பாரம் தாங்காமல், கன்டெய்னர் லாரியின் டயர் வெடித்தது விசாரணையில் தெரிய வந்தது.