/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்துாக்கி, நகரும் படிக்கட்டுகள் அமைக்க ஒப்பந்தம்
/
மின்துாக்கி, நகரும் படிக்கட்டுகள் அமைக்க ஒப்பந்தம்
மின்துாக்கி, நகரும் படிக்கட்டுகள் அமைக்க ஒப்பந்தம்
மின்துாக்கி, நகரும் படிக்கட்டுகள் அமைக்க ஒப்பந்தம்
ADDED : பிப் 23, 2024 12:29 AM
சென்னை, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 69,180 கோடி ரூபாய் செலவில், 119 கி.மீ., நீளத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் வரும் 2028ம் ஆண்டுக்குள் முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, சோழிங்கநல்லுார் முதல் சிறுசேரி 'சிப்காட்' மற்றும் கோயம்பேடு சந்தை முதல் 'எல்காட்' பூங்கா இடையே அமைய உள்ள மேம்பாலப் பாதையில் 31 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
இந்த ரயில் நிலையங்களில் மின்துாக்கிகள், நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம், 'ஷிண்ட்லர் இந்தியா பிரைவேட்' நிறுவனத்திற்கு நேற்று வழங்கப்பட்டது.
மொத்தம் 295 கோடி ரூபாயில் இந்த பணிகள் நடக்க உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகளுக்கான ஏற்பு கடிதத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, ஷிண்ட்லர் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு வழங்கினார்.