/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர் தற்கொலை
/
குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர் தற்கொலை
குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர் தற்கொலை
குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர் தற்கொலை
ADDED : ஏப் 22, 2025 12:43 AM
புளியந்தோப்பு, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 24. இவர், பட்டாளம், குடிநீர்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் சொந்த ஊர் சென்று திரும்பிய ரஞ்சித்குமார், சரியாக வேலை செய்யாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 5:00 மணியளவில், குடிநீர் வாரிய அலுவலகப்பணியில் இருந்த ரஞ்சித்குமார், ஓய்வறையில் துாக்கிட்டு இறந்து கிடந்துள்ளார்.
புளியந்தோப்பு போலீசார் ரஞ்சித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், விழுப்புரம் சென்றிருந்த ரஞ்சித்குமார், மாற்று சாதி பெண்ணை காதலித்து வந்துள்ளதும், அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.