ADDED : பிப் 27, 2024 12:24 AM
அ நிறம் | அளவு
பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், மளங்கானந்தபுரத்தைச் சேர்ந்தவர் எழிலரசன், 38. தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, குரோம்பேட்டை - பல்லாவரம் இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
