பணி நீக்கத்தை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் மறியல்
பணி நீக்கத்தை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் மறியல்
ADDED : ஜூன் 02, 2026 05:48 AM

கானத்துார்: பணி நீக்கம் செய்ததை கண்டித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசு நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் நேற்று, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இ.சி.ஆர்., முட்டுக்காட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தேசிய மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், 250க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்கள், 15 ஆண்டுகளாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த நிலையில், நிதி பற்றாக்குறை, நிர்வாக மாற்றம் காரணமாக, மே 31ம் தேதியுடன் பணிநீக்கம் செய்து, புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நேற்று பணிக்கு அனுமதிக்காததால் இ.சி.ஆரில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கானத்துார் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் அந்நிறுவன இயக்குநர் ராம்குமாரிடம் பேச்சு நடத்தினர். பணி நீக்கத்தை கைவிடுவதாகவும், அவர்கள் பணியில் தொடரலாம் எனவும் ராம்குமார் கூறியதையடுத்து, ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
