/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வக்பு போர்டு சுவர் இடிப்பால் சர்ச்சை
/
வக்பு போர்டு சுவர் இடிப்பால் சர்ச்சை
ADDED : செப் 20, 2024 12:40 AM
சென்னை, விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் உள்ள, வக்பு போர்டுக்கு சொந்தமான பள்ளிவாசலில் தலைவராக உள்ளவர் கமல் நாசீர்.
நேற்று முன்தினம் மாலை, மீனாட்சி கல்லுாரியில் மின்மாற்றி அமைப்பதற்காக ஜே.சி.பி., வாகனத்தை வைத்து சுத்தம் செய்த போது, அருகே இருந்த வக்பு போர்டுக்கு சொந்தமான, 4 அடி சுற்று சுவரை இடித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த கமல் நாசீர், சம்பவ இடத்திற்கு சென்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் தகராறு செய்ததால், கே.கே.நகர் காவல் நிலையத்தில் கமல் நாசீர் புகார் அளித்தார். ஜே.சி.பி., ஓட்டுனர் சாமுவேல், 23, உட்பட மூவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், இடிக்கப்பட்ட சுற்று சுவரை கட்டித்தருவதாக கல்லுாரி நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரும் சமரசமாக சென்றதால், போலீசார் மேல் நடவடிக்கையை கைவிட்டனர்.