/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் சில்மிஷம் சமையல் மாஸ்டர் கைது
/
பெண்ணிடம் சில்மிஷம் சமையல் மாஸ்டர் கைது
ADDED : மே 15, 2025 12:11 AM

துரைப்பாக்கம் கேரளா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண், துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர், அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ளார்.
கடந்த 12ம் தேதி இரவு, பணி முடித்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, துரைப்பாக்கம், ஸ்ரீசாய் நகரில் வழக்கமாக சாப்பிடும் ஓட்டலின் மாஸ்டர் லோகேஸ்வரன், 24, பின் தொடர்வது தெரிந்தது.
குடியிருப்புக்கு அருகில் சென்றபோது, பெண்ணின் வாயை பொத்தி கையை பிடித்து, மறைவான பகுதிகளுக்கு இழுத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட முயன்றார்.
சுதாரித்த பெண், லோகேஸ்வரன் கையை கடித்து, சத்தம் போட்டார். தொலைவில் நின்ற நபர்கள் ஓடி வந்தபோது, லோகேஸ்வரன் தப்பி சென்றார்.
துரைப்பாக்கம் போலீசார், பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்து, லோகேஸ்வரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
**